News February 27, 2025
ரேஷன் கடைகளுக்கு மார்ச்சில் 6 நாட்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு கடைகள் திறக்கப்படாது. அதேபோல், மார்ச் மாதத்தில் கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை வருகிறது. மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.
Similar News
News February 28, 2025
தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1,755 கோடி செலவிட்ட பாஜக

2023-24 பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.1,755 கோடி செலவிட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ரூ.619 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.107 கோடியை செலவிட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பாஜக, காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு ரூ. 2669.86 நன்கொடை கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
News February 28, 2025
பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம்.. அரசுக்கு ஐகோர்ட் கெடு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
News February 28, 2025
ராசி பலன்கள் (28.02.2025)

மேஷம் – தாமதம், ரிஷபம் – ஆதரவு, மிதுனம் – பாராட்டு, கடகம் – மேன்மை, சிம்மம் – புகழ், கன்னி – பணிவு, துலாம் – வெற்றி, விருச்சிகம் – செலவு, தனுசு – பயம், மகரம் – கவலை, கும்பம் – லாபம், மீனம் – ஆதாயம்.