News March 22, 2024

“ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்”

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்களை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும், பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியத்தை ₹2.70 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Similar News

News October 23, 2025

BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

image

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

2045-ல் விண்வெளியில் வசிப்போம்: ஜெப் பெசோஸ்

image

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

BREAKING: இந்திய அணி 264 ரன்கள் குவிப்பு!

image

ஆஸி.,க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264/9 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் அடித்து அவுட்டாகினர். ஆஸி., அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களையும், பார்ட்லெட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த ஸ்கோரை Defend செய்து வெற்றி பெறுமா இந்தியா?

error: Content is protected !!