News October 19, 2025
உலகின் 6 அதிசயமான மர்ம இடங்கள்

நீர் நிறமற்றது, காற்று மணமற்றது உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகள் எப்போதும் இயற்கையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இயற்கைக்கு மாறாக செயல்பட்டாலும், அவையும் நம்மோடே இருக்கின்றன. இவை கட்டுக்கதைகள் அல்ல, NASA உள்ளிட்ட விஞ்ஞான தளங்களால் நிரூபிக்கபட்டவை. இவ்வாறான இயற்கைக்கு எதிராக இருக்கும் இடங்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த, ரசித்த, அறிந்த இதுபோன்ற இடங்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News October 19, 2025
டெல்லியின் பெயரை மாற்ற கோரும் VHP

டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ (Indraprastha) என மாற்ற வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, டெல்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் தலைநகரை, அதன் பண்டைய வரலாறு & கலாசாரத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட், ரயில் நிலையத்தின் பெயரை மாற்றவும் VHP கோரியுள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News October 19, 2025
20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

மஞ்சள் அலர்ட்டால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், தி.மலை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளி ஷாப்பிங் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்க!
News October 19, 2025
நெல் கொள்முதலில் திமுக மீண்டும் நாடகம்: EPS

பருவமழைக்கு முன்பாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், திமுக அரசு காதில் வாங்கவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் அரசின் மோசமான நிர்வாகத்தால் டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாகவே உள்ளது என்றும் சாடியுள்ளார். மேலும், 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் EPS, அரசை வலியுறுத்தியுள்ளார்.