News August 7, 2025
4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை: CM

கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ₹10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2வது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 7, 2025
அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்த திமுக: EPS

2002-ல் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் திமுக, அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்ததை நீங்கள் உணர வேண்டும் என இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள கடையநல்லூரில் EPS பேசியுள்ளார். அதிமுக ஆட்சி செய்த 31 ஆண்டுகளில் எவ்வித மத சண்டையோ, சாதி சண்டையோ நடக்காமல் TN அமைதிப் பூங்காவாக இருந்தது என்றார். மேலும், அனைத்து மதத்தையும் சமமாகப் பார்க்கும் அதிமுக மீது திமுக திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News August 7, 2025
செப்.1 முதல் சம்பள உயர்வு: TCS

TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரை இதில் பலன் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
விஜய்யுடன் கூட்டணி? பிரேமலதா சூசகம்

அரசியலுக்கு வந்தபிறகும் செந்தூரபாண்டியின் (விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக் கொள்கிறார். குறிப்பாக கேப்டனின் போட்டோக்களை தவெகவினர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான், தற்போதைக்கு விஜயகாந்த் போட்டோக்களை பயன்படுத்த வேண்டாம்; கூட்டணிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என நேற்று பிரேமலதா கூறினார். இது, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான மறைமுகமாக சமிக்ஞை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.