News April 25, 2024
ஒரே ஓவரில் 6, 4, 6, 6, 6.. அசத்திய பந்த்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (66) அரைசதம் அடிக்க, அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். அதுவும் கடைசி ஓவரில் 2, Wd, 6, 4, 6, 6, 6 என அடித்து அசத்திய அவர், அணிக்கு அதிக ரன்களை பெற்று தந்தார். குஜராத் அணி பந்துவீச்சாளர்களில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும், நூர் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Similar News
News September 23, 2025
தங்கமாக ஜொலிக்கும் ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 3 மணி நேரத்தில் லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளது. இந்த போட்டோஸை மேலே இணைத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா லைக் போடுங்க.
News September 23, 2025
பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லை: நிதின் கட்கரி

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் சாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
News September 23, 2025
தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!