News October 30, 2024
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

கரூர் மாவட்டம் புது காளியம்மன் கோவில் காமராஜரை சேர்ந்தவர் செல்வராஜ் 54, இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் நேற்று மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து செல்வராஜை கரூர் டவுன் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Similar News
News November 10, 2025
கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
News November 10, 2025
கரூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <
News November 10, 2025
கரூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்


