News June 4, 2024
6 வது சுற்றில் திமுக முன்னிலை

தென்காசி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது சுற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம். திமுக-12,6566,அதிமுக 63,268, பாஜக- 50,029, நாத- 35,272 ,தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 63298 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
தென்காசியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

தென்காசி, சங்கரன்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (விவசாயி). நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. உடனே அவரது உறவினர்கள் மாரியப்பனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
News July 7, 2025
நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.