News February 26, 2026

6 சீட்டுகளுக்கு 10 கட்சிகள் போட்டி.. இன்று தொடங்குகிறது!

image

TN-ல் ஏப்.2-ம் தேதி காலியாகவுள்ள 6 ராஜ்யசபா MP-க்களுக்கான தேர்தல் பணிகள் இன்று தொடங்குகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் திமுக, அதிமுக இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சீட்டுக்கு மல்லுகட்டுகின்றன. அதேபோல், அதிமுகவில் பாமக, பாஜக, தமாகா, அமமுகவும் சீட்டுக்கு துண்டு போடுவதால் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

Similar News

News February 26, 2026

தொகுதி பங்கீடு: விசிக, தவாகவுக்கு திமுக அழைப்பு

image

கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள திமுக, தற்போது தவாக (பிப்.27) & விசிக (மார்ச் 2) கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நான்குமுனை போட்டியை முன்வைத்து, கூட்டணி கட்சிகள் இரண்டிலக்க தொகுதிகளை டிமாண்ட் செய்வதாக கூறப்படுகிறது. அதிலும், திமுகவின் சில சிட்டிங் தொகுதிகளையும் கேட்கிறதாம். இதையெல்லாம் சரிகட்டி திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

News February 26, 2026

7 தொகுதிகள், தனிச் சின்னம்.. பாரிவேந்தரின் டிமாண்ட்!

image

NDA கூட்டணியில் உள்ள IJK-வின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் ரவி பச்சைமுத்து ஆகியோர் EPS-ஐ நேரில் சந்தித்து பேசினர். அப்போது, வரும் தேர்தலில் IJK போட்டியிட விரும்பும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாரிவேந்தர் வழங்கியுள்ளார். மேலும், இத்தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் IJK-வுக்கு 2 – 3 தொகுதிகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News February 26, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. காலையில் 1 அவுன்ஸ்(28g) $5,208 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி $21 குறைந்து (₹1,908) மளமளவென குறைந்து $5,187 ஆக உள்ளது. வெள்ளி விலையும் $2.33 ஆக குறைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் வரும் நாள்களில் தங்கம் விலை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

error: Content is protected !!