News August 26, 2024
6 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.53.50 கோடியில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், மூலகொத்தளத்தில் ரூ.14.31 கோடியில் புதிய சமுதாய நலக்கூடம், புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் ரூ.11.43 கோடியில் நவீன சலவைக் கூடம், புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் எரிகளை ரூ.36 கோடியில் மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.115.58 கோடி செலவில் 6 திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
Similar News
News November 7, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே.சாலை & ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்கிறது. எனவே, நவ.9ம் தேதியன்று, காலை 10 மணி முதல் நவ.10 காலை 10 மணி வரை தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம், அடையாறு மண்டலம் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. <<18222652>>தொடர்ச்சி<<>>
News November 7, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் (2/2)

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் <
News November 7, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.


