News March 25, 2025
6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
தென்காசி: 2 கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை மற்றும் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கே.ஆலங்குளம் மற்றும் கலிங்கப்பட்டி ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான விருதுக்கு தேர்வு. கலிங்கப்பட்டி மதிமுக தலைவர் வைகோ சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
ஆலங்குளம்: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு! 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டு முருகன் என்பவரை இரு நபர்கள் அரிவாளால் வெட்டினர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டியதாக பொத்தையை சேர்ந்த இசக்கி பாண்டி (28) அவரது நண்பர் பேச்சி துரை (19) ஆகிய இருவரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
News December 6, 2025
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


