News September 25, 2025

5-வது நாளாக தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் கலக்கம்

image

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்து 81,159 புள்ளிகளிலும், நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 24,890 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. ICICI, HDFC, Bajaj Finance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன. அதேநேரம் Axis Bank, Bajaj Auto, Hero உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்துள்ளன.

Similar News

News September 25, 2025

₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

image

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாம். 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன., முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News September 25, 2025

விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி எது தெரியுமா?

image

உருளைக்கிழங்கு தான் விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி. விண்வெளியில் உணவு பொருட்களை விளைவிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் நாசாவும் விஸ்கான்சின் பல்கலையும் இணைந்து செயல்பட்டன. இதற்காக 1995-ல் கொலம்பிய விண்கலத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு விளைந்த உருளைக்கிழங்கை வீரர்கள் உண்ணவில்லை. ஆய்வு செய்வதற்காக அவை பூமிக்கு கொண்டுவரப்பட்டன. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 25, 2025

தன் சாதனையை தகர்த்த சிறுமிக்கு கமல் பாராட்டு

image

தேசிய விருது வென்ற 4 வயது சிறுமியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘நாள் 2’ படத்திற்காக சிறுமி த்ரிஷா தோஷர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வென்றிருந்த நிலையில், நான் 6 வயதில் தான் வென்றிருந்தேன், அதை தற்போது நீங்கள் முறியடித்துள்ளீர்கள் என கமல்ஹாசன் x-ல் வாழ்த்து கூறியுள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக கமல் 6 வயதில் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!