News October 20, 2024
59 குளங்கள் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி தகவல்

தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், காந்திநகர் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News July 10, 2025
மெரினா நீச்சல் குளம் 20 நாட்களுக்கு இயங்காது

மெரினா நீச்சல் குளம், தண்ணீர் சுத்திகரிப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக 20 நாட்கள் மூடப்படுகிறது. ஜூலை 11, 2025 முதல் ஜூலை 31, 2025 வரை (20 நாட்கள்) நீச்சல் குளம் இயங்காது. பைப் அமைத்தல், 180 மீ விட்டம் கொண்ட 9 புதிய ஊறுகுழிகள் பொருத்துதல், மற்றும் சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் தங்குதடையின்றி நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் நீச்சல் குளத்தின் தரமான செயல்பாட்டிற்கு உதவும்.
News July 9, 2025
சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி மீது காட்டம்

சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டல அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் குறித்து நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்துக் கொள்கிறாரா?” எனக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.
News July 9, 2025
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 17 வேலைவாய்ப்புகள்

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் 17 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.dcourts.gov.in/ ஐப் பார்வையிட்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். இது குறித்த அறிவிப்பை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.