News December 31, 2024
59 வினாடிகளில் 32 வகையான மேஜிக்

மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் 10 வயதான இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே சிறுமிக்கு மேஜிக் கலை மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளம் வயதிலேயே கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்ததில் 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.
Similar News
News November 9, 2025
கால்வாயில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் எஸ் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(51). டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று சமயபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த கால்வாயில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
திருச்சி: உங்கள் PAN ரத்து செய்யப்படலாம்

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News November 9, 2025
முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் நேரு

நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, திமுக நிர்வாகிகள், செயலாளர்கள், கழகத் தொண்டர் அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


