News November 11, 2024
ரயில்வேயில் 5,647 காலியிடங்கள்.. உடனே APPLY

இந்திய ரயில்வேயில் (வடக்கு) காலியாகவுள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அப்ரென்டிஸ் நிலையிலானவை ஆகும். இதில் எஸ்சி பிரிவினருக்கு 879, எஸ்டி பிரிவினருக்கு 435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க டிச.3ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News January 20, 2026
சாய்னா நேவால் ஓய்வு!

நீண்டகால முழங்கால் பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த சாய்னா நேவால், தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார். இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் போட்டியில் ஒரு போட்டி ஆட்டத்தில் விளையாடிய சாய்னா, ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தம் 24 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
News January 20, 2026
இளமையான தோற்றம் பெற இது அவசியம்

அழகான மற்றும் இளமையான தோற்றம் கொண்ட சருமத்துக்கு, வெளிப்புறத் தோல் பராமரிப்பு மட்டுமே உதவாது. நாம் தினசரி உணவில் சரியான ஊட்டச்சத்து சேர்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, தோலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி கொண்ட உணவுகள் என்னென்னவென்று மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE.
News January 20, 2026
ரூ.4.15 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை

2025-ல் இந்தியா ரூ.41.5 கோடிக்கு எலக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி அதிகரிப்பால், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அந்நியச் செலாவணி வரத்தும் மேம்பட்டுள்ளது என்றும், 4 செமி கண்டக்டர் ஆலைகள் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்குவதால் 2026-லும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.


