News April 21, 2025
நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை

நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெனியூ மாகாணத்தில் கால்நடை மேய்ப்பர்கள், விவசாயிகள் இடையே கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்தவ மதத்தினர் விவசாய தொழிலிலும், கால்நடை மேய்க்கும் தொழிலில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 56 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Similar News
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் 110 பேர் கைது!

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் பூபதி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 110 பேரை போலீசார் இன்று (டிச.5) கைதுசெய்தனர்.
News December 5, 2025
அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.


