News April 8, 2025
56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 12, 2025
BREAKING இராமநாதபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.12) கனமழைக்கான மஞ்சள் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
ராம்நாடு: வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு

தொண்டி அருகேயுள்ள எம்ஆர் பட்டினம் பகுதியைச் சேர்ந்த நதியா (41) வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுள்ளது. அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த 7 பவுன் டாலர் செயின், 2 பவுன் டாலர் செயின், 2½ பவுன் நெக்லஸ் உள்பட 11½ பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


