News April 26, 2025

56 அடியாக குறைந்தது வைகை அணை நீர்மட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (26-04-2025) காலை அணையில் நீர்மட்டம் 56 அடியாக குறைந்துள்ளது. மேலும் தற்போது உள்ள தண்ணீரை குடிநீருக்காக சேர்த்து வைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 19, 2025

தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு – கலெக்டர் தகவல்

image

தேனி: இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ.25 – 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவி நிலைகளில் பணியாற்றலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தகவல். ஷேர்பண்ணுங்க

News November 19, 2025

தேனி: பூச்சி கடித்ததில் முதியவர் உயிரிழப்பு

image

தேனி மாவட்டம், தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (61). கடந்த வாரம் இவர் வீட்டில் இருக்கும் பொழுது விஷப்பூச்சி ஒன்று இவரை கடித்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று (நவ.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 19, 2025

கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

image

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!