News December 9, 2025

55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

image

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News April 5, 2026

புதிய மாவட்டமாக உருவாகிறதா விருத்தாசலம்?

image

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டமாக இருக்கும் கடலூரை பிரித்து, விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று 2021-ல் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக திமுக முன்னாள் MLA இள.புகழேந்தி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2026-ல் விருத்தாசலம் தனி மாவட்டமாக கண்டிப்பாக உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

News April 5, 2026

RBI தங்கம் கொள்முதல் பாதியாக குறைந்தது!

image

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.

News April 5, 2026

பரப்புரையை தொடங்குகிறார் அண்ணாமலை

image

பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இன்று முதல் அண்ணாமலை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். கோவை வடக்கு தொகுதியில், வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, நாளை அவிநாசி தொகுதியில் L.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

error: Content is protected !!