News June 19, 2024
வெப்ப அலை காரணமாக 550 பேர் பலி

சவூதி அரேபியாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர்களில், 550 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வெப்ப அலை தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News March 19, 2026
‘Jan Dhan’ வங்கிக் கணக்கில் பணம்.. மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் 57.80 கோடி ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளில் சுமார் ₹3 லட்சம் கோடி டெபாசிட் இருப்பதாக பார்லிமென்ட்டில் FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன்தன்’ வாடிக்கையாளர்களுக்கு ₹39.45 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில், 55% பெண்களின் வங்கிக் கணக்குகள் எனவும் அவர் கூறியுள்ளார். ‘ஜன்தன்’ அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. Overdraft மூலம் ₹10,000 ஈஸியாக கடன் பெறலாம்.
News March 19, 2026
புதுவை வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் பாஜக

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்க்க என்.ஆர்.ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. NDA கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 12, அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக போட்டியிடும் 12 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.
News March 19, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.


