News October 11, 2025

TN-ல் 2 ஆண்டுகளில் 550 வெடிகுண்டு மிரட்டல்கள்!

image

கடந்த 2 ஆண்டுகள் CM ஸ்டாலின், EPS, விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீடுகள், ஐகோர்ட், தலைமைச் செயலகம், கல்வி நிலையங்கள் உள்பட 550 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 95% மைக்ரோசாப்ட்டின் Hotmail, outlook-ல் வந்துள்ளதால் தகவல்கள் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் <<17957142>>விஜய் வீட்டிற்கு<<>> மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News March 27, 2026

அண்ணாமலை விலகியதற்கு அதிமுகதான் காரணமா?

image

அண்ணாமலை தேர்தலில் இருந்து விலகியதற்கு அதிமுக மீதான அதிருப்தியே காரணம் என புதிய தகவல் ஒன்று அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிவருகிறது. பாஜக வளர்ந்து வரும் தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்கின்றனர். இதனாலேயே தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

ராகு காலம் சென்டிமென்ட் பார்த்த ஜி.கே.வாசன்

image

தமாகா வேட்பாளர்களை சரியாக நண்பகல் 12.12 மணிக்கு தான் அறிவிப்பேன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அப்போது ஏன் இந்த டைம்-ஐ தேர்வு செய்தீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உங்களுக்கு ஒரு சென்டிமென்ட் என்றால் எனக்கு ஒரு சென்டிமென்ட் இருப்பதாக பதில் அளித்தார். உண்மையில் காலை 10.30 – நண்பகல் 12 மணி வரை ராகு காலம் என்பதால், அவர் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என பேசப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹15,000 குறைந்தது

image

தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலை குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹15 குறைந்து ₹245-க்கும், 1 கிலோ வெள்ளி ₹15,000 குறைந்து ₹2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹15,000 குறைந்ததால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!