News March 16, 2024
தேர்தலில் பயன்படுத்தப்படும் 55 லட்சம் EVM இயந்திரங்கள்
மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படவுள்ளன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
Similar News
News November 19, 2024
மிகப்பெரிய தவறு செய்து விட்டோம்: ராகுல் வருத்தம்
2011ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோதே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் UPA அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் பேட்டியளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கூட்டணியின் சிந்தனையில் உதித்த குழந்தை. அதை அமல்படுத்தாதது தவறு என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ராகுலின் கருத்து குறித்த உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.
News November 19, 2024
BGT தொடர் உருவான வரலாறு தெரியுமா?
1996-ல் INDவில் சுற்றுப்பயணம் செய்த AUS அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது இருநாட்டு கிரிக்கெட்டிற்கு பங்காற்றிய ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கரை கவுரவிக்கும் வகையில் தொடரை அவர்களின் பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நாளடைவில் இது ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ எனப் பெயரிடப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 16 தொடர்கள் நடைபெற்ற நிலையில், IND அணி 10 முறை வென்றுள்ளது.
News November 19, 2024
இனி இவர்களுக்கு இங்கு வேலையில்லை: TTD முடிவு
திருப்பதி கோயிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. புதிய அறங்காவலர் குழு நிர்வாகிகள் கூட்டம் தேவஸ்தானம் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.நாயுடு இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிற மதத்தை சேர்ந்த 44 ஊழியர்களை ஆந்திர அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறினார்.