News July 1, 2024
55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம்

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கண்பார்வை இழப்பை தடுப்பதற்காக ஜுலை மாதம் முழுவதும் வைட்டமின் யு திரவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் யு திரவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 55 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்,
Similar News
News August 15, 2025
நாகையில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை பற்றி அலோசிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News August 14, 2025
நாகை மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு !

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் நாகை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW!
News August 14, 2025
நாகை மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை ஆக.15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 9.05 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைத்துள்ளார்.