News April 20, 2025
53 லட்சம் வாகனங்கள்.. இந்திய ஏற்றுமதிக்கு அதிகரித்த மவுசு!

இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 19% அதிகரித்து, 53 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக SIAM தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் உலகளாவிய பிராண்ட்களின் தேவை அதிகரித்துள்ளதால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 7.70 லட்சம் பயணிகள் வாகனங்கள், 80,986 வணிக வாகனங்கள், 4.19 லட்சம் 2 சக்கர வாகனங்கள், 3.10 லட்சம் 3 சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் & ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
News April 20, 2025
நடிகை சில்க் தற்கொலை.. நீடிக்கும் மர்மம்

தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். ஹிரோயினுக்கான தகுதிகள் இருந்தும், கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்காெலை செய்து கொண்டார். இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும், இன்னும் உண்மை வெளிவரவில்லை. மர்மம் நீடிக்கிறது.
News April 20, 2025
மோசமான ஃபார்ம்… RCB-யில் மாற்றப்பட்ட வீரர்..

பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ரொமாரியோ ஷெப்பர்ட் களமிறக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? நீங்கள் என்ன நினைக்கிறீங்க?