News December 17, 2025

520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

image

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.

Similar News

News December 21, 2025

முட்டைகள் பாதுகாப்பானவையே: FSSAI

image

முட்டைகளில் நைட்ரோஃபியூரான் இருப்பதாகவும், இதனால் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவல் தவறானவை & அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என FSSAI தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் மனிதர்கள் உண்பதற்கு முற்றிலும் பாதுகாப்பானது தான் என்றும் உறுதியளித்துள்ளது. நைட்ரோஃபியூரான் பயன்பாட்டுக்கான தடையை அனைத்து முட்டை நிறுவனங்களும் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

News December 21, 2025

ஸ்டாலின் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்: தமிழிசை

image

பைபிள் வாசகங்களை பெருமையாக குறிப்பிடும் CM ஸ்டாலின் மதச்சார்பற்றவராக இருந்தால், பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு உள்ளீர்களா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு இந்து பகையை விதைத்துக் கொண்டிருப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மையை பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

News December 21, 2025

மாயம் செய்து மயக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

image

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், கரையோரம் சாய்ந்து பார்த்து, ரசிகர்கள் மனதை ஈர்க்கிறார். அவர் கொடுத்திருக்கும் போஸில், மனதை கட்டிப்போடும் மாயாஜாலமாக செய்திருக்கிறார். அவரது, போட்டோக்கள் அனைத்தும், ‘என்ன மாயம் செய்தாயோ’ என்று மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது.

error: Content is protected !!