News February 18, 2025
52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Similar News
News November 24, 2025
சிவகங்கை: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

கீழக்குளம் கிராமம் அருகே உள்ள அடர்த்தியான மற்றும் முள்ளான காட்டு பகுதியில், ஒரு history sheeter பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல history sheeters கூடியிருந்தார்கள். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 40 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் குழு முற்றுகையிட்டு இருவரை கைது செய்ததோடு 2 வாள்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் சில சந்தேகப்பொருட்கள் பறிமுதல் செய்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
News November 24, 2025
சிவகங்கைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
சிவகங்கை: 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். தற்போது மாநகாராட்சியில் புகார் அளித்துள்ளனர்
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


