News October 21, 2024
ரயில்வேயில் 5,066 அப்ரண்டிஸ் பணியிடங்கள்

மேற்கு ரயில்வேயில் 5,066 அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.22) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பில் 50% தேர்ச்சியுடன், ஐடிஐ தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பாக 15- 24 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் rrc-wr.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News July 6, 2025
அஜித் குமாரின் தம்பிக்கு ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை

போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை அரசு ஹாஸ்பிடலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னையும் போலீஸ் தாக்கியதாக நவீன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ICU-ல் அவர் சிகிச்சை பெற்று வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. நவீனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News July 6, 2025
கடைசிநாள் போட்டி மழையால் பாதிப்பு

2-வது டெஸ்டின் கடைசிநாள் ஆட்டம் தொடங்குவதில் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவை என்ற நிலையில் ஏற்கனவே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியா வெற்றி பெற மேலும் 7 விக்கெட்கள் தேவை. ஆனால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கவில்லை என்றால் போட்டி டிராவாகவே அதிக வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு இது சாதகமான முடிவாகவே இருக்கும்.
News July 6, 2025
அடுத்த இடத்துக்கு முன்னேறும் மணிகண்டன்?

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவரான மணிகண்டன், அடுத்ததாக பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை நீலம் புரடொக்ஷன் தயாரிக்கிறது. இது நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஃபேமிலி ரோலில் நடித்துவந்த மணிகண்டன், அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.