News April 23, 2025
புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள்.. அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இந்தாண்டு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக அரசு பதவியேற்று கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் புதிய மின் இணைப்புகள், 1.82 லட்சம் புதிய விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதேபோல், புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News September 11, 2025
சற்றுமுன்: அடுத்த 1 மணி நேரத்திற்கு அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
TET தேர்வு: மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

TET தேர்வு கட்டாயம் என்ற SC-யின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் TET-ல் தேர்ச்சி பெற வேண்டும்; அப்படி இல்லையென்றால் கட்டாய ஓய்வு வழங்கலாம் என்று செப்.1-ம் தேதி SC தீர்ப்பளித்தது. இதனால், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரசு மேல்முறையீடு செய்கிறது.
News September 11, 2025
வெற்று ஊசியை செலுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் உடம்பில் வெற்று ஊசியை செலுத்தினால் அது உங்கள் உயிருக்கே ஆபத்து என சொன்னால் உங்களால நம்பமுடிகிறதா? வெற்று ஊசியில் இருக்கும் காற்று ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துமாம். இதனால் அதிகபட்சமாக மாரடைப்பு கூட ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஊசியில் இருக்கும் காற்றின் அளவு, செலுத்தப்படும் இடத்தை பொருத்து விளைவானது மாறுபடும். எனவே, விளையாட்டுக்கு கூட இத பண்ணாதீங்க. SHARE.