News November 13, 2025
50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்பட 30 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
Similar News
News November 13, 2025
கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுக்கும் ஹர்திக்!

வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹர்திக் பாண்ட்யா பரோடா அணிக்காக விளையாடவுள்ளார். ஆசிய கோப்பை தொடரில், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், கிட்டத்தட்ட 2 மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். வரும் டிசம்பர் மாதம் தொடங்கும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான T20 தொடருக்கு முன்னோட்டமாக அவர் இத்தொடரில் விளையாட உள்ளார் என கூறப்படுகிறது.
News November 13, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

கனரா வங்கி தனது MCLR விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் (0.05%) குறைத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலாகியுள்ளது. இதன்மூலம் ஓவர்நைட் MCLR விகிதம் 7.95%-ல் இருந்து 7.90% ஆக குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கான MCLR விகிதம் 8%-ல் இருந்து 7.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, பெர்சனல், வாகன கடன் வாங்கியவர்களின் மாதாந்தர EMI குறைகிறது. உடனே வங்கிக்கு கால் பண்ணி செக் பண்ணுங்க. #SHARE IT.
News November 13, 2025
குளிர்காலத்தில் பருக வேண்டிய எலுமிச்சை இஞ்சி கதா!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிரினால் ஏற்படும் சளி, இருமலை சமாளிக்கவும் எலுமிச்சை – இஞ்சி கதா பருக சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ◆தேவையானவை: இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் தூள் ◆செய்முறை: தண்ணீரில் இஞ்சி சாறு, இலவங்கப்பட்டை, மிளகு & மஞ்சள் தூளை சேர்த்து 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி எலுமிச்சை சாறு & தேன் கலந்து பருகலாம்.


