News April 13, 2024
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.5,000

திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.5,000 அளவிற்கு பயனடைவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள முதியோருக்கு மாதம் ரூ.1,200, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பேருந்து மூலம் மாதம் ரூ.2,000 என மொத்தமாக ஒரு மாதத்திற்கு ரூ.5,000 வரை பயனடைகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
தங்க விற்பனையில் மாறும் டிரெண்ட்!

தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக நகை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், தங்கத்தை முதலீடு நோக்கத்திலேயே அணுகுவதால் காயின், தங்கக் கட்டி வாங்குவதாக கூறியுள்ளனர். அதனை பணத் தேவையின் போது சிறிதளவும் மதிப்பு குறையாமல் விற்பனை செய்யலாம். ஆனாலும், இப்படி செய்வதால் நகை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
News April 27, 2025
25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்.. கணவரின் திட்டம்!

வரதட்சணையாக ₹50 லட்சமும், 100 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு கேரளாவின் ஷாகா குமாரியை (52) அருண் (27) 2020-ல் திருமணம் செய்கிறார். கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஷாகா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருணை வற்புறுத்துகிறார். ஆனால், ந்த இரண்டுலுமே அருணுக்கு விருப்பமில்லை. இதனால், ஷாகாவை கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்த நிலையில், அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News April 27, 2025
போலி சான்றிதழ் வழக்கு…உ.பி. Dy. CM-க்கு செக்

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது.