News October 1, 2024
5,000 சிவப்பு காதுகள் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காதுகள் கொண்ட நட்சத்திர ஆமைகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட பயணிகள் 2 பேரை, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்கின்றனர். மேலும், ஆமைகள் மலேசியாவிற்கு, விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டன.
Similar News
News August 20, 2025
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் மயங்கி விழுந்து பலி

மாமல்லபுரத்தில் நேற்று(ஆகஸ்ட் 19) இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண் சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகிழ்ச்சியான சூழலில் நடந்த இச்சம்பவம், திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News August 20, 2025
செங்கல்பட்டில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
இ- ஸ்கூட்டர் பெற மானியம்

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க