News September 5, 2024
5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே முட்டத்தூர் கிராமத்தில் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கு அதற்கான தடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வெண் சாந்து ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டது” என்றார்.
Similar News
News September 1, 2025
உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 1, 2025
விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <
News September 1, 2025
விழுப்புரத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்