News August 8, 2024
5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.
Similar News
News November 21, 2025
வேலூர்: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

வேலூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
வேலூர்: வாக்காளர் கணக்கீடு படிவங்கள் 96% விநியோகம்!

வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் (SIR) கணக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வீடு வீடாக சென்று (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 96 சதவீத மக்கள் வரை சென்றுவிட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பகுதிகளில் விரைவில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், பொதுமக்கள் படிவங்களை கவணத்துடன் எழுதவேண்டும் என அறிவுருத்தினர்.


