News March 19, 2024
மாற்றுக் கட்சியினர் 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
Similar News
News April 26, 2025
நாளை காலை Chicken வாங்க போறீங்களா?

வார விடுமுறையான ஞாயிறுக்கிழமை (நாளை) அசைவம் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இதனால், சிக்கன், மட்டன் வாங்க காலையிலேயே மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதும். நாளை சிக்கன் வாங்க செல்வோர் இப்போதே விலையை தெரிந்து கொள்ளுங்கள். ஆம்! நாமக்கல்லில் கறிக்கோழி ஒரு கிலோ (உயிருடன்) ₹88-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹85-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
News April 26, 2025
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவர் கைது

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று குல்காமின் குயிமோ அடுத்த தொகேபரா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குயிமோவைச் சேர்ந்த பிலால் அகமது பட் மற்றும் முகமது இஸ்மாயில் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News April 26, 2025
மிகப்பெரிய என்கவுன்டர்.. 37 பேர் பலி?

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கர்ரேகுட்டாவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 37 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.