News March 29, 2024
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுமென ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், “இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 50% இல்லையா? உயர்கல்வி பயில்வோரில் பெண்கள் 50% இல்லையா? ஆம் எனில், அரசுப் பணிகளில் மட்டும் பங்கு ஏன் குறைவாக உள்ளது. இடஒதுக்கீடு அளிக்கும் வலிமையால் பெண்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
இங்கு பள்ளிகளுக்கு 2 நாள்களே விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் நவ.24-ல் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் தொடர்ந்து 3 நாள்களும் (ஜன.24,25,26), தென்காசி மாவட்டத்திற்கு 2 நாள்களுக்கு மட்டும் (ஜன.25,26)விடுமுறை வருகிறது. இதனால், <<18933777>>திருச்சியை <<>>போல் தென்காசிக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News January 23, 2026
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று மாலை ரூபாய் மதிப்பு 54 பைசா சரிந்து ₹91.95-ஆக உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News January 23, 2026
ஜெயலலிதா குறித்து PM மோடி சொன்ன வார்த்தை!

TN-ல் தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் PM மோடி சாடியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும், அவர் தைரியமாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். மேலும், போதைப்பொருள் மாஃபியா கும்பலிடம் மாணவர்களை திமுக ஒப்படைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.


