News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News November 4, 2025
விஜய் கட்சியின் சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவின் சின்னத்தை அறிய பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சின்னத்திற்கு விண்ணப்பிக்க நாளை தவெகவினர் டெல்லி செல்கின்றனர். இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆட்டோ, விசில் சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
News November 4, 2025
அழகியே.. அரசியே.. சமந்தா

சுட்டி சமந்தாவின் சேட்டைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. SM-யில் ஆக்டிவா இருக்கும் சமந்தா, இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸை பார்த்தவுடன், ‘24’ படத்தில் வரும் “மெய் நிகரா” பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு எந்த பாடல் நினைவுக்கு வந்தது? கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: மாணவர்கள் குஷி

தேர்தலையொட்டி இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளன. அந்த வகையில், மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும். +2 தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவதால், 2 மாதங்களுக்கும் மேல் லீவுதான். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6-ல் கடைசி தேர்வு நடைபெற இருப்பதால், ஜூன் வரை அவர்களுக்கும் விடுமுறையே. மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.


