News August 27, 2025
50% ஆஃபர்.. Redmi அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

Redmi ஃபோனுக்கான Battery-ஐ 50% தள்ளுபடியில் மாற்றிக் கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு Redmi ஆஃபரை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25 முதல் 30-ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் சென்டர்களில் இந்த சலுகையை பெற்ற முடியும். இந்த வாய்ப்பை தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அப்பறம் என்ன உடனே சர்வீஸ் சென்டருக்கு கிளம்புங்க.. Battery-ஐ மாத்துங்க.
Similar News
News August 27, 2025
வாக்கு திருட்டு விவகாரம்: நெல்லையில் காங்., மாநாடு

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து விளக்குவதற்காக நெல்லையில் செப்.7-ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News August 27, 2025
700 வருடங்களாக மக்களை காக்கும் எரிமலை கணேசன்!

எரிமலை வெடித்து மக்களை துன்புறுத்தாமல் இருக்க, 700 ஆண்டுகளாக ஒரு சிறு விநாயகர் சிலை காப்பாற்றி வருவது உங்களுக்கு தெரியுமா? இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவாவில் உள்ள ப்ரோமோ எரிமலையின் விளிம்பில் உள்ள விநாயகர் சிலையால் தான், இதுவரை எரிமலை வெடிக்கவில்லை என மக்கள் நம்புகின்றனர். எரிமலை குறித்து பயமின்றி மக்கள், விநாயகருக்கு பூ, பழம் சமர்ப்பித்து வழிபாடும் செய்து வருகின்றனர். SHARE IT.
News August 27, 2025
BREAKING: இளைஞர் கடத்தல்.. பிரபல தமிழ் நடிகை ஓட்டம்

ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார். எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, லட்சுமி மேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.