News March 16, 2025
ஆற்றில் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்

ஜாம்பியா ஆற்றில் 5 கோடி லிட்டர் ஆசிட் கலந்ததால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சீன காப்பர் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் ஆசிட், கழிவை சேமிக்க தடுப்பணை இருந்தது. அது உடைந்து ஆசிட், கைபூ ஆறில் கலந்துள்ளது. இதனால் அந்த ஆற்று நீரில் மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கின்றன. இந்த விவகாரத்தில் உதவும்படி நிபுணர்களுக்கு ஜாம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 17, 2025
இந்திய அணி சாம்பியன்.. சாதித்துக் காட்டிய லெஜண்ட்ஸ்!

இந்தியாவுக்கு எதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். இதனால், இந்திய அணி எளிதாக வென்று கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. இந்திய அணியை நாமும் வாழ்த்தலாம்!
News March 17, 2025
கணவன் முன்பே மனைவி பலாத்காரம்… கொடுமை!

ஒடிசாவின் பலோசர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஒருவர், தன் மனைவியின் ஆதாரில் உள்ள தவறை சரிசெய்ய பக்கத்து வீட்டுக்காரரை நாடியுள்ளார். உதவுவதாக கூறிய அந்நபர், கணவன், மனைவி இருவரையும் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, கணவனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளான். போதையில் கணவன் சுயநினைவை இழந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். போலீஸ் தேடி வருகின்றனர்.
News March 17, 2025
ராசி பலன்கள் (17.03.2025)

➤மேஷம் – விருத்தி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – ஓய்வு ➤கடகம் – சிரமம் ➤ சிம்மம் – லாபம் ➤கன்னி – நட்பு ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – வெற்றி ➤மகரம் – களிப்பு ➤கும்பம் – சோர்வு ➤மீனம் – போட்டி.