News August 7, 2025

ஸ்டாலின் ஆட்சிக்கு 50 மார்க்.. பிரேமலதா திடீர் திருப்பம்

image

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறையும், குறையும் கலந்த ஆட்சி, அதற்கு 50 மார்க் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பிரேமலதா, தற்போது மென்மையான போக்குடன் கையாள்வது கூட்டணிக்கே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 7, 2025

டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

image

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.

News August 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 7 – ஆடி 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை.

News August 7, 2025

யாருக்காகவும் கிரிக்கெட் நிற்காது: கங்குலி

image

டெஸ்ட், டி20 -களில் ஓய்வு அறிவித்த வீரர்கள் ODI-ல் விளையாடுவார்களா என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது எனவும், கவாஸ்கர் சென்ற பிறகு சச்சின் வந்தார், டிராவிட், சேவாக், லக்‌ஷ்மனுக்கு பிறகு கோலி உதித்தெழுந்தார். தற்போது ஜெய்ஸ்வால், பண்ட், கில் இருக்கின்றனர். உள்ளூர் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!