News August 25, 2024
50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணி ஆணை

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு , 411 பேர் கருணை அடிப்படையில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
Similar News
News September 17, 2025
வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
News September 17, 2025
சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 17, 2025
சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத் திணறல்

இசையமைப்பாளரும் நடிகருமான சங்கர் கணேஷ் மூச்சு திணறல் காரணமாக சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்து உள்ளது கண்டு
பிடிக்கப்பட்டது.