News December 24, 2025

50 ஓவரில் 574 ரன்கள்.. இமாலய சாதனை

image

50 ஓவர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை பிஹார் அணி படைத்துள்ளது. VHT தொடரில், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்துள்ளது. List A மட்டுமின்றி 50 ஓவர் வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச ஸ்கோர். கனி, ஆயுஷ், <<18657068>>சூர்யவன்ஷி<<>> ஆகியோர் அதிரடி சதம் விளாசினர். இதில் கனி 32 பந்துகளிலேயே சதமடித்து List A-ல் 3-வது அதிவேக சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 38 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.

Similar News

News December 27, 2025

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 விலை மாறியது

image

தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. <<18682690>>தங்கம் இன்று சவரனுக்கு ₹880<<>> உயர்ந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹274-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,74,000-க்கும் விற்பனையாகிறது. இது முதலீடு நோக்கத்தில் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

News December 27, 2025

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: சேகர்பாபு

image

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என H.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அத்தைக்கு மீளை முளைத்தால் தான் அவர் சித்தப்பா; முதலில் அவரை ஒரு தொகுதியில் நின்று வெல்ல சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். H.ராஜாவுக்கு எதிராக திமுக சாதாரண தொண்டனை நிறுத்தி மண்ணை கவ்வ வைக்கும் என்றும் கூறினார். பாஜக அவரை கண்டுகொள்ளாததால் இப்படி பேசிவருவதாகவும் தெரிவித்தார்.

News December 27, 2025

VHT-ல் விராட், ரோஹித் பெறும் சம்பளம் இதுதான்

image

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை(VHT) வழக்கத்தைவிட கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இருவருக்கும் இங்கு எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். VHT பொறுத்தவரை சீனியர் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ₹60,000, மிட் லெவல் பிரிவுக்கு ₹50,000, ஜூனியருக்கு ₹40,000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!