News October 25, 2024
50 பைசாவிற்கு ரூ.15,000 அபராதம் நஷ்ட ஈடு

சென்னை, பொழிச்சலூரில் வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத தபால் நிலையத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்தது. சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்பிய தொகையான ரூ.29.50க்கு பதில் ₹30 செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு பணிபுரிந்த அலுவலர் மீதம் சில்லறை தராததால் நீதிமன்றத்தை நாடி, ரூ.15,000 நஷ்டஈடு பெற்றுள்ளார்.
Similar News
News November 21, 2025
சென்னை: டிகிரி போதும், ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <
News November 21, 2025
சென்னை: பியூட்டி பார்லரில் பாலியல் தொழில்!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் போலீசார் நேற்று சோதனை செய்த போது, இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சரவணன் (29) என்பவரை கைது செய்தனர். மேலும் 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
News November 21, 2025
சென்னை: நாட்டையே உலுக்கிய பவாரியா வழக்கில் இன்று தீர்ப்பு!

2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். இவரை ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனையடுத்து, ஐஜி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தது. இந்த கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.21) தீர்ப்பு வழங்கவுள்ளது.


