News August 2, 2024
50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக, மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் முறையிட்டார். சௌந்தர பாண்டியன் 50,000 லஞ்சம் கேட்டு இன்று பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Similar News
News October 29, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (அக்.29) தா.பேட்டை ஒன்றியம் பைத்தம் பாறை பகுதியிலும், மருங்காபுரி ஒன்றியம் செவல்பட்டி பகுதியிலும், மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும் பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் துறையூர் நகராட்சி பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
திருச்சி: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தப்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் கண்டறியப்பட்ட வார்டுகளில் காலை, மாலை என முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


