News April 1, 2025
5 வயதாகியும் தலை நிற்காமல் தவிக்கும் குழந்தை!

கரூர், கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான நாராயண சாமி. இவரது 5 வயது மகளுக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதியுதவி அளிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 5, 2025
கரூர்: திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை!

கரூர்: கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும். ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்
News April 4, 2025
திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை அறிவிப்பு.

கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25ம் தேதி பிற்பகல் 3மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும்.ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்
News April 4, 2025
திருமண தடை நீக்கும் புகழிமலை முருகன்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்தக் கோயில் முன்னர் மைசூர் எல்லையாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இங்கு, தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப்பூ மற்றும் செவ்வாழைப்பழம் முருகனுக்கு படைத்து வந்தால் திருமணத் தடை நீங்கி இல்லற வாழ்க்கைக்குச் செல்லலாம் என்பது நம்பிக்கை.