News September 26, 2025
ஜாக்பாட் அடிக்க போகும் 5 ராசிகள்

அக்.3-ம் தேதி புதன், துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *மிதுனம்: காதல் வாழ்க்கை சிறக்கும், புகழ், செல்வம் பெருகும் *கடகம்: வீடு, வாகனம் வாங்கும் யோகம், குடும்ப சிக்கல் தீரும் *சிம்மம்: பணவரவு அதிகரிக்கும், IT, மீடியா துறையினருக்கு சாதகம் *விருச்சிகம்: அனுகூலமான நன்மைகள் கிடைக்கும், பழைய குழப்பங்கள் தீரும் *கன்னி: நிதிநிலை மேம்படும், வணிகத்தில் லாபம்.
Similar News
News January 4, 2026
ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: அமித்ஷா

ஸ்டாலினின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவது தான் என்றும், ஆனால் அவரது கனவு நிறைவேறாது எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் மிக குறைவாகவே திமுக நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஊழலின் மொத்த அடையாளமாக அக்கட்சி இருப்பதாகவும் சாடியுள்ளார். வரும் ஏப்ரலில் NDA தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
News January 4, 2026
BREAKING: நகைச்சுவை நடிகர் காலமானார்

நகைச்சுவை நடிகர் வெங்கட் ராஜ் காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சியின் காமெடி காட்சிகளில் பட்டையை கிளப்பிய இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனையடுத்து, தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த வெங்கட் ராஜ், நடிகர் சந்தானத்துடன் பல படங்களில் நடித்துள்ளார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மதியம் அவரது உயிர்பிரிந்தது. RIP
News January 4, 2026
மெடிக்கல் மிராக்கிள்.. கோமாவில் இருந்து மீண்ட வீரர்!

EX AUS கிரிக்கெட் வீரர் டேமியன் மார்டின் (55), ஆச்சரியப்படும் வகையில் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். கடந்த டிச.26-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவில் விழுந்தார். தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும், இது ஒரு மெடிக்கல் மிராக்கிள் என்றும் மார்டினின் நண்பரும், முன்னாள் AUS வீரருமான கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.


