News June 17, 2024
கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த 5 வீரர்கள்

இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 4,076 பவுண்டரிகள் விளாசி, அதிக பவுண்டரி அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 3,015 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆஸி முன்னாள் வீரர் பாண்டிங் (2,781 பவுண்டரி), இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே (2,679 பவுண்டரி), இந்திய அணி வீரர் கோலி (2,647 பவுண்டரி) ஆகியோர் 3 முதல் 5 வரையிலான இடங்களை வகிக்கின்றனர்.
Similar News
News November 14, 2025
41 பேரை கொன்றவன் தலைவனா? யுகபாரதி

திமுக சார்பில் சென்னையில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தெருவில் கூட்டத்தை கூட்டி 41 பேரை கொன்றவன் தலைவனா என விஜய்யை மறைமுகமாக சாடினார். 1950-களில் அண்ணா கூட்டம் நடத்திய போது, பணம் வசூல் செய்து கூட்டத்தை நடத்திய கிட்டப்பாவிற்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதை புரிந்து கொண்ட அண்ணா, அவரை MLA ஆக்கினார், அவர் தான் தலைவர் என்றும் யுகபாரதி கூறினார்.
News November 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 519 ▶குறள்: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. ▶பொருள்: தன் பதவியில் செயல்திறன் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால், அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீங்குவாள்.
News November 14, 2025
நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழக சாம்பியன்

கத்தாரில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் ஃபைனலில், தமிழக வீராங்கனை அனுபமா ராமசந்திரன் வெற்றி வாகை சூடியுள்ளார். 3 முறை உலக சாம்பியனான ஹாங்காங்கைச் சேர்ந்த ஆன் ஈ-ஐ, 3 – 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம், உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அனுபமாவிற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


