News March 10, 2025
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 பேர் பலி!

மும்பையின் நக்படா பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹசிபல் ஷேக், ராஜா ஷேக், ஜியாவுல்லா ஷேக், ஹிமாந்த் ஷேக் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பலனின்றி பர்ஹான் ஷேக் இன்று மரணமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விஷவாயு தாக்கியது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2025
சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 2 நிரந்தர நீதிபதிகள்!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த இருவருக்கும், நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், இன்னும் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
News March 10, 2025
திரைத்துறையை அதிர வைத்த பாலியல் வழக்குகளில் திருப்பம்

கேரள திரைத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் புகார்தாரர்கள் வாக்குமூலம் அளிக்கவில்லை. விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பினாலும், அதற்கு பதில் அளிக்கவும் இல்லை. பெண்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத காரணங்களால், பல வழக்குகள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது.
News March 10, 2025
மும்மொழிக் கொள்கையை TN ஏற்காது; கனிமொழி திட்டவட்டம்

மும்மொழிக் கொள்கையை TN நிச்சயம் ஏற்காது என திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரதானின் பேச்சுக்கு பதிலளித்த அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக MPகள் ஒருபோதும் கூறியதில்லை என்றார். TN MPகள் நாகரீகமற்றவர்கள் என பேசியது வருத்தம் அளிப்பதாகவும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மனதை புண்படுத்தியிருந்தால் அந்தக் கருத்தை வாபஸ் பெறுவதாக பிரதான் கூறினார்.