News March 2, 2025
தூக்கத்திலேயே உயிரிழந்த 5 பேர்

மரணம் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், சில மரணங்கள் மிகவும் துயரம் தருபவை. பஞ்சாபில், தரன் தரன் மாவட்டத்தில், ஒரு குக்கிராமத்தில், 3 டீன் ஏஜ் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர் கோபிந்தா சிங்- அம்ரித் தம்பதி. அதிகாலை 4:30 மணி அளவில், பழுதடைந்த மேற்கூரை மீது வைக்கப்பட்டிருந்த பாரம் தாங்காமல், திடீரென கூரை இடிந்து விழுந்ததில் மொத்த குடும்பமும் பலியாகியுள்ளனர். சாவு இப்படியா வரணும்?
Similar News
News March 3, 2025
ஸ்பெஷல் சாதனை படைத்த கோலி

NZக்கு எதிரான போட்டியின் மூலம் 300 ODIகளை கோலி நிறைவு செய்தார். 300 ODIகளை நிறைவு செய்த 18 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் யாரும் படைக்காத ரெக்கார்டை கோலி படைத்துள்ளார். அதாவது, கோலி தவிர்த்து இவர்களில் யாரும் தங்கள் அணிக்காக 100 டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. அனைத்து ஃபார்மெட் சர்வதேச போட்டிகளிலும் தங்கள் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரராக கோலி உள்ளார்.
News March 3, 2025
அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

மத்திய இணை அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
News March 3, 2025
இன்றைய (மார்ச்.03) நல்ல நேரம்

▶மார்ச்- 03 ▶மாசி – 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திரம் ▶நட்சத்திரம் : ரேவதி.