News April 22, 2024
Purple தொப்பிக்கு 5 பேர் போட்டி

2024 ஐபிஎல்லில் Purple தொப்பிக்கு 5 பேர் இடையே போட்டி நிலவுகிறது. அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்க்கு Purple தொப்பி வழங்கப்படும். இதுவரை நடந்த 37 போட்டிகள் முடிவின்படி, மும்பையின் பும்ரா, பஞ்சாபின் படேல் 13 விக்கெட்டையும், ராஜஸ்தானின் சாஹல், மும்பையின் கோட்சி 12 விக்கெட்டையும், பஞ்சாபின் சாம் கர்ரன் 11 விக்கெட்டையும் வீழ்த்தி, Purple தொப்பிக்கான போட்டியில் உள்ளனர்.
Similar News
News January 16, 2026
தேமுதிக பிடிவாதத்தால் EPS அப்செட்

தேமுதிகவின் சமீபத்திய கடலூர் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளே எதிர்பாரத வகையில் பெரும் கூட்டத்தை பிரேமலதா கூட்டிவிட்டார். அதை காரணம் காட்டி, பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படி கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என EPS கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 16, 2026
உழவுத் தோழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்

உழவுத் தோழர்களுக்கு பகிர வேண்டிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் இதோ *உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்.. *உழவுக்கு உறுதுணை புரியும் மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி உரைத்துப் பொங்கலிடும் நாள், மாட்டுப் பொங்கல் திருநாள்! *இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
News January 16, 2026
சமூக சேவைக்கு ₹81,324 கோடி கொடுத்த பில் கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான Bill & Melinda Gates Foundation-ஐ மூடும் பணிகளை பில்கேட்ஸ் தொடங்கியுள்ளார். அதன்படி நடப்பாண்டில் $9 பில்லியன் (₹81,324 கோடி) தொண்டு பணிகளுக்கு செலவிடும் அதேவேளையில், தனது அறக்கட்டளையில் வேலை செய்யும் 500 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளார். 2045-க்குள் தனது சொத்தின் பெரும்பகுதியை ($200 பில்லியனை தாண்டும்) நன்கொடையாக வழங்கி அறக்கட்டளையை மூட உள்ளார்.


