News March 17, 2024
அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் திருடியதாக 5 பேர் கைது

அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடியதாக திருச்சியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1-3 வரை நடந்தது. அப்போது, சிலரின் கார் கண்ணாடியை உடைத்து ₹10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
தங்கம் போல் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டி

தனது வெட்க புன்னகையால் இளசுகளின் இதயங்களை வென்றவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள கீர்த்தி, தமிழிலும் LIK, வா வாத்தியார், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தங்க நிறத்தில் சேலை அணிந்து பூவுலகின் தேவதை போல் ஜொலிக்கும் போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பார்த்தவுடன் ஆளை மயக்கும் கீர்த்தியின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
News October 20, 2025
சிறப்பான சேவையில் சென்னை மெட்ரோ முதலிடம்

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘கம்யூனிட்டி ஆப் மெட்ரோஸ்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 32 நகர்ப்புற மெட்ரோ ரெயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் மெட்ரோ ரெயில் சேவையின் தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயன்படுத்துவதற்கு எளிமை, சவுகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
News October 20, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.