News March 19, 2024
திமுக கூட்டணிக்கு 3 கட்சிகள் ஆதரவு

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மமக உள்பட 3 கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
Similar News
News March 14, 2026
எப்படி இருந்த வைகோ, இப்படி ஆகிவிட்டார்: அண்ணாமலை

திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலைமையை பார்க்கும்போது பரிதாபமாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், அரசியலில் எப்படி இருந்த வைகோ இப்படி(4 சீட்டு) ஆகிவிட்டார் எனவும், அந்தக் கூட்டணியில் மேலும் சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறினார். குறிப்பாக திருமாவளவன் 6 (அ) 7 சீட்டுக்கெல்லாம் OK சொல்லமாட்டார். அதனால், திமுக கூட்டணியில் பல மாற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது என்றார்.
News March 14, 2026
காங்., தேமுதிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகளா? CPM

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் பஞ்சாயத்து வெடித்துள்ளது. காங்கிரஸுக்கும், தேமுதிகவுக்கும் கூடுதல் தொகுதிகளை கொடுக்கும் திமுக, எங்களுக்கு தொகுதிகளை குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை என <<19377648>>CPM <<>>மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மதவாத சக்திகளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளும் முக்கியம் எனக் கூறி திமுகவுக்கு அவர் செக் வைத்துள்ளார்.
News March 14, 2026
அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்

விஜய்க்கு DCM பதவி, 50+ தொகுதிகள் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் <<19375620>>தவெக <<>>இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மக்கள் பிரச்னைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவே, தவெகவை தொடர்புப்படுத்தி இதுபோன்ற தகவல் வெளியாவதாக CTR கூறியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட தலைமை சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தவெகவினர் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.


